Mount Tomboro

மவுண்ட் தம்போரா (Mount Tombora)

இந்த ஒரு மலை உலக வரலாற்றையே திருப்பி போட்டுச்சுன்னு  சொன்னா நம்புவீங்களா .

இந்த தம்போரா மலை ஒரு எரிமலை. இது இந்தோனேஷியா பரப்புல  இருக்கு. சுமத்ரா தீவுலேந்து 2600 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு .



ஒரு காலத்தில இதுவே இந்தியனெசியாவிலே அதிக உயரம் உடைய மலை.

இதை தம்பூரா (Tomboro) நும் சொல்லுவாங்க.

உயரம்
- வருடம் 1815 க்கு முன்னாடி 14,100 அடி
- வருடம் 1815 க்கு பின்னாடி 9350 அடி ( ஏன் ? )
- அதன் துவாரத்தோட அகலம் 7கிலோ மீட்டர் ( நம்ம வீட்டுல  கை கழுவ தண்ணி புடிக்கிறோமே அந்த பைப் அகலம் 1இன்ச் இல்லை 2 இன்ச் தான்... இப்போ compare பண்ணிக்கோங்க அகலத்தை )

வழக்கம் போல மக்கள் எல்லாரும் வாழுறாங்க எவ்ளோ பெரிய ஆபத்து இருக்குனு உணராம...

1815 ஏப்ரல் 5, எரிமலை துவாரத்திலேந்து மெதுவா புகை வர ஆரம்பிச்சிச்சு. எல்லாரும் இது வழக்கம் தான் எங்க தாத்தா காலத்திலயேம் இப்படி தான் ஒன்னும் கண்டுக்கல...

ஏப்ரல் 10, மாலை 7 மணி தம்போரா வெடிச்சி சிதற ஆரம்பிக்குது... பூமி எல்லாம் அதிருது நில நடுக்கம் தொடர்ந்து சுனாமி ... எல்லாரும் வீட்டை விட்டு வெளில வர .. எங்கே பார்த்தாலும் ஒரே புகை அது எல்லாம் எரிமலையோட சாம்பல் ... அந்த எரிமலை வெடிச்ச சத்தம் 2600 கிலோ மீட்டர் தள்ளி உள்ள சுமத்ரா தீவுக்கு ஏதோ துப்பாக்கி சத்தம் போல கேட்டுச்சாம்...



இந்த எரிமலை வெடிச்ச அளவு  Volcanic Explosivity Index of 7 அப்படினு சொல்றாங்க... இந்த அளவு இதுவே முதலும் கடைசியும்மாம்.

இந்த அளவு வெடிச்சத்தம் தம்போராவ  சுத்தி 80 கிலோ மீட்டர் மக்களுக்கு விலங்குகளுக்கும் கூட காது ஜவ்வு கிழிந்து இருக்கும்னு சொல்றாங்க... ஆனா அதுக்கு ஏதும் ரெகார்ட் இல்லை...

ஏப்ரல் 10, மாலை 7 மணி யாராலயும் தப்பிக்க முடியல, 7km அகலம் உள்ள எரிமலை வாய்  வழியா magma  சொல்லக்கூடிய நெருப்பு குழம்பு பீச்சிகிட்டு  வானத்து மேல மேல போய்கிட்டே இருக்கு... அதுக்கு மேல போகமுடியாம கீழ்நோக்கி வீடு மேல மாடு மேல மனுஷன் மேல குழந்தை மேல எல்லாம் விழுது...விழுந்த அடுத்த கணமே உயிர் பிரிந்துடும்

200 கிலோமீட்டர் தூரம் இந்த குழம்பு விழுந்துருக்கு...

நெருப்பு குழம்பு மட்டும் இல்லை முக்கியமா எரிமலை வாயு sulphur அதிகம் காற்றை விட அதிகம் இருக்க அதை சுவாசிக்க எல்லாரும் நுரையிறல் நிரம்பி மூச்சி மூட்டி இறந்தனர்...

வான்நோக்கி குழம்பு மட்டும் போகவில்லை sulphur ரம் சேர்ந்து போக அது மேகங்கள் கூட இணைய தண்ணியும் sulphur சேர்ந்து கட்டி கட்டியாய் சிமெண்ட் concrete  மாதிரி கொட்ட வீட்டுக்குள் ஒளிந்தவர்கள் எல்லாம் உயிரோட சமாதி ஆனார்கள்..



வயல்கள் எல்லாம் சாம்பல் மற்றும் sulphur  concrete  நாள் மறைந்தது ...

தம்போராவின் பீறிட்டு எழுந்த sulphur வாய்வு சும்மா அங்கேயே நின்று விடவில்லை மெல்ல மெல்ல மேல் காற்றின் போக்கில் நகர ஆரம்பித்தது... மேகங்களுடன் சேர சூரியன் வெளிச்சம் குறைய பூமியின் வெப்பம் குறைய ஆரம்பித்தது ... 32 டிகிரி இருந்து 3 டிகிரி பின்னர் -3...

இதே சமையத்தில் தான் நம் தமிழ்நாட்டிலியும் ஒரு வாரம் சூரிய வெளிச்சம் இல்லாமல் பனிபொழிந்தது...
சுமத்ரா தீவில் இருந்து வந்த வெள்ளைக்கார கமாண்டர்  ஒரு பை பூரா சாம்பல் கொண்டுவந்தார் அது கல்கத்தா ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டது .

இந்த மேகங்கள் ஐரோப்பாவை நோக்கி நகர அது அவர்களுக்கு "கோடை இல்ல வருடம்" ஆனது... ஆமாம் ஏப்ரல் மாதத்தில் பனி பொழிய விவயசாயம்  எல்லாம் பாழ்  ஆனது ...

உலகமே உணவு இல்லாமல் தத்தளிக்க தொடங்கியது ... புரட்சிகள் ஆரம்பித்தன நாட்டு மக்களை காக்க முடியவில்லை எதற்கு நீங்கள் அரசர்கள் என்று...

உலகையே ஒரு 10 வருடங்கள் சூன்யம் ஆக்கியது இந்த கடைக்கோடியில் இருக்கும் தம்போரா...

இப்போ அதனோட உயரம் 9350 அடியா குறைஞ்சிடுச்சு...

இப்போவும் தம்போராவ  அதிக அளவுல கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்க....

புதிய நீரோடை உருவாகியிருக்கும் இந்த எரிமலை வாய்க்குள்... இதுவரை மனிதர்கள் பார்க்காத புதுப்புது மரங்கள் வளர ஆரம்பிச்சிருக்கம்...

நன்றி

சோமு

Comments

Popular posts from this blog

Olive tree and Palestine in Tamil

Chernobyl - செர்னோபில்

HARIBO- Gummy Bear