Zeljava Air Base in Tamil
ஸில்ஜாவ விமான போர் தளம் (Zeljava Air base)
- இது அப்போதைய யுகஸ்லோவியா நாட்டின் பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம்.
- இதோட அதிகாரபூர்வ இரகசிய குறியீடு OBJEKAT 505
- இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய பூமிக்கடியில் உள்ள மிகவும் இரகசிய இராணுவ தளம்
- இது கட்டப்பட்ட ஆண்டு 1948 முதல் 1968
- இதை கட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் கல் செலவானது
குகைக்குள்ளே என்னென்ன இருக்கு :
- இது அணு குண்டு வெடிப்பை கூட தாங்கி நிற்கும் அப்படி வடிவைமைக்கப்பட்டது
- இந்த குகையின் மொத்த நீளம் 3.5 கிலோ மீட்டர்
- இந்த குகைக்கு 4 வழிகள் உண்டு
- இந்த 4 வழிகளுமே 100 டன் எடைகொண்ட கதவுகளில் பாதுகாக்கப்பட்டது
- இப்போ இந்த நாலாவது வழி Croatia நாட்டு எல்லைக்குட்பட்டது
- இதற்குள் 1000 பேர் 30 நாட்கள் தங்க கூடிய வசதி உள்ளது
- வேலைபார்ப்போர்கள் quarters, மெஸ் ஹால்
- 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, எரிபொருள், சமையல் கட்டு, ஆய்தங்கள்.
- இதற்குள் 30 நாள் ஓடக்கூடிய ஜெனெரேட்டர் உள்ளது
- விமானங்கள் , சமையல் மற்றும் ஜெனெரேட்டர் கு தேவையான எரிபொருள் இரகசிய பைப் மூலம் 20km தள்ளி உள்ள நகரமான Bihac இருந்து கொண்டுவரப்பட்டது
1989 - இந்த குகை எப்படி இருக்குனு பாருங்க
உள்நாட்டு போர்:
- வழக்கம் போல போஸ்னியா , செர்பியா, croatia உள்நாட்டு போர் உச்சமடைய யுகஸ்லோவியா சிதற இந்த இராணுவ குகை யார்கைக்கும் போகக்கூடாது னு அப்போதைய மார்சால் Tito இந்த குகையை அழித்துவிட உத்தரவு பிறப்பித்தார்.
- 6 பில்லியன் அமெரிக்க டாலர் வீணானது
- ஆறு மாத காலத்துக்கு இந்த குகைள் குள் புகை வந்ததாக சொல்றாங்க
- இந்த குகைக்குள்ளே இருந்த smoke detector எதுவும் அகற்றப்படவில்லை.
- அகற்றப்படாமலேயே வெடி வைத்து தகர்க்கப்பட்டது அதனால் அங்கே அணுக்கதிர்வீச்சு Americanium காத்துல கலந்து இருக்கு.
- இவ்ளோ வெடி வைச்சும் இன்னும் இது முழுவதுமா சிதையள.
- இந்த குகையை பார்க்க உலகம் முழுக்க நிறைய பேர் வந்து போறாங்க.
உள்ளே இருக்கும் மாசு படிந்த காற்று
Majestic Dakota C-47B
கேரோசென் ஜெனெரேட்டர்
கொசுறு : இந்த குகையை பார்க்க போகும்போது சமதள ரோட்டேயே பார்த்து போங்க ஏன்னா ரோட்டை விட்டு புல்தரைக்கு போன கண்ணிவெடி இருக்கும். இன்னும் இந்த கண்ணிவெடிகள் அகற்றப்படல.
Comments
Post a Comment